2010-12-14 15:09:40

கடுமையானக் காலநிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்கு நாடுகள் இன்னும் அதிக முயற்சிகளை எடுக்க ஐ.நா. வலியுறுத்தல்


டிச.14,2010.ஐரோப்பாவின் பல நகரங்களில் மக்களை வீட்டுக்குள்ளே முடக்கிப் போட்ட அண்மைக் கடும் பனிப்பொழிவுகள், முன்கூட்டியே கணிக்க முடியாதபடியான வெப்பநிலை மாற்றங்களை எதிர்கொள்ள உலகம் இன்னும நன்கு தயாரிக்கப்படவில்லை என்பதையே காட்டுகின்றன.

இவ்வாறு கூறிய, பேரிடர்க் குறைப்புக்கான ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Margareta Wahlström, கடுமையானக் காலநிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்கு நாடுகள் இன்னும் அதிக முயற்சிகளை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

கடந்தவாரத்தில் பிரான்சும் பிரிட்டனும் கடும் பனிப்பொழிவால் மிகவும் பாதிக்கப்பட்டன. பத்து முதல் இருபது சென்டி மீட்டர் அளவுக்குப் பெய்த பனி, ஐரோப்பாவின் பல நகரங்களில் விமான நிலையங்களின் செயல்பாடுகளை முடக்கிப் போட்டன.








All the contents on this site are copyrighted ©.