2010-12-13 09:24:36

டிசம்பர் 13 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1124 – திருத்தந்தை 2ம் கலிஸ்டஸ் இறந்தார்

1521 –திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் பிறந்தார்

1545 – திரிதெந்தின் திருச்சங்கம் தொடங்கியது

1972 - அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.

1974 - மால்ட்டா குடியரசானது.

2001 - இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 13 - ஜூலியன் நாட்காட்டிப்படி நீண்ட இரவையும் குறைவானப் பகலையும் கொண்ட நாள்








All the contents on this site are copyrighted ©.