2010-12-13 16:05:56

இலங்கைக் கத்தோலிக்கர்களும், இஸ்லாமியர்களும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள Rizana Nafeekன் வாழ்வைக் காப்பாற்றும் முயற்சி


டிச.13, 2010. சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள Rizana Nafeekன் வாழ்வைக் காப்பாற்றும் முயற்சியில் இலங்கைக் கத்தோலிக்கர்களும், இஸ்லாமியர்களும் இணைந்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று நினைவுகூரப்பட்ட அகிலஉலக மனித உரிமைகள் நாளையொட்டி, Jael என்னுமிடத்தில் உள்ள துயரங்களின் அன்னை மரியாவின் கோவிலில் கத்தோலிக்கர்கள் செபித்த அதேவேளையில், மூன்று இஸ்லாமியத் தொழுகைக் கூடங்களில் நடுப்பகல் செபத்தின் போது Rizanaவுக்கு சில நிமிடங்கள் ஒதுக்கப்பட்டதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

2007ம் ஆண்டு Rizanaவுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து, இலங்கைக் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனரான அருள்தந்தை ஜார்ஜ் சிகாமணி இந்த வழக்கில் ஈடுபட்டு பல வழிகளிலும் முயற்சிகள் செய்து வருவது குறிப்பிடத் தக்கது.

Rizanaவின் விடுதலைக்கென மனித உரிமைகள் நாளன்று Galleயில் மேற்கொள்ளப்பட்ட ஒரு போராட்டத்தில் 1500 பேர் கலந்து கொண்டனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.