2010-12-11 14:41:58

தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் உலகில் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்


டிச.11,2010. தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் உலகில் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இவ்வெண்ணிக்கை அதிக வருவாய் ஈட்டும் நாடுகளைவிட வளரும் நாடுகளில் குறைந்தது இரண்டு மடங்கு அதிகம் என்று ஐ.நா.நலவாழ்வு அதிகாரி ஒருவர் கூறினார்.

மோசமான சுகாதார வசதிகள், கழிவுப்பொருட்கள் குவிப்பு, மருத்துவ உள்கட்டமைப்பும் மருத்துவக் கருவிகளும் பற்றாக்குறை, வழிகாட்டி முறைகள் குறைவுபடுதல் போன்ற காரணங்களால் நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக் கொள்கின்றன என்று பிரிட்டன் மருத்துவ இதழான The Lancet ல் அவ்வதிகாரி கூறியுள்ளார்

வளரும் நாடுகளில் நலவாழ்வுக்கான வசதிகள் மோசமான நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ள ஐ.நா. அலுவலகர் Benedetta Allegranzi, சில இடங்களில் அறுவை சிகிச்சை மூன்று நோயாளிகளுக்கு ஒருவர் வீதம் மிக மோசமான பாதுகாப்பற்ற இடங்களில் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.