2010-12-11 14:42:45

சிகரெட்டில் 4,000 நச்சுப் பொருட்கள் இருக்கின்றன, மருத்துவத் தகவல்


டிச.11,2010. சிகரெட்டில் 4,000 நச்சுப் பொருட்கள் இருக்கின்றன, அதில் 56 பொருட்கள் புற்று நோயை உருவாக்கக் கூடியவை என்று புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் விதுபாலா கூறினார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற, புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய விதுபாலா, புகையிலையைப் பயன்படுத்துவோருக்குப் புற்றுநோய், மாரடைப்பு, ஆண்மைக்குறைவு, நுரையீரல் பிரச்சனை, மூளைபாதிப்புப் போன்ற நோய்கள் வருகின்றன என்றார்.

இவர்கள் வாழ்வில் சராசரி 15 ஆண்டுகாலத்தையும் இழக்க நேரிடும் என்றும் புகையிலையை ஒழிப்பதில் கடைக்காரர்களுக்கும் மிகுந்த பங்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 இலட்சம் பேரும் ஒரு நாளைக்கு 2500 பேரும் புகையிலை தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர் என்ற தகவலையும் டாக்டர் விதுபாலா வெளியிட்டார்







All the contents on this site are copyrighted ©.