2010-12-09 15:20:11

மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட உலகம் இன்று அதிகம் ஊழல் நிறைந்ததாய் இருக்கிறது


டிச.09, 2010. மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட உலகம் இன்று அதிகம் ஊழல் நிறைந்ததாய் இருக்கிறதென்று உலகஅளவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.
டிசம்பர் 9ம் தேதி, இவ்வியாழன், அனைத்துலக ஊழல் ஒழிப்பு நாள் என்று கடைபிடிக்கப்படுவதையொட்டி Transparency இன்டர்நேஷனல் என்ற ஊழல் கண்காணிக்கும் ஒரு நிறுவனம் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 56 விழுக்காடு மக்கள் உலகம் இன்று அதிகம் ஊழல் நிறைந்ததாய் இருக்கிறதென்று கருத்து தெரிவித்துள்ளனர்.
பருவ நிலை மாற்றம், ஏழ்மை, வேலையின்மை, உணவுப் பொருட்களின் விலையுயர்வு ஆகிய அனைத்துப் பிரச்சனைகளைக் காட்டிலும், உலகில் ஊழல்கள் பெருகி வருவதே பெரும் கவலையைத் தருவதாக இக்கருத்துக் கணிப்பில் மக்கள் கூறியுள்ளனர்.
உலகின் பல நாடுகளிலும் அதிக ஊழலில் மூழ்கி இருப்பது அந்நாடுகளின் அரசு என்றும், இதனால், இப்பிரச்சனையைக் களைவதற்கு அரசுகள் சக்தியற்றுள்ளன என்றும் இக்கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறியுள்ளனர். மத நிறுவனங்களிலும் ஊழல் அதிகரித்திருப்பதாக இக்கருத்துக் கணிப்பு கூறுகிறது.
Afghanistan, Nigeria, India, Iraq ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துச் சேகரிப்பில், இந்நாட்டின் மக்கள் தங்களது ஒவ்வொரு நாளின் வாழ்க்கையிலும் ஊழலைச் சந்திக்க வேண்டியுள்ளதேன்று குறிப்பிட்டுள்ளனர்.BBC செய்தி நிறுவனம் அனைத்துலக ஊழல் ஒழிப்பு நாளையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, Denmark, New Zealand, Singapore ஆகியவை உலகில் ஊழல்கள் மிகவும் குறைந்த முதல் மூன்று நாடுகள் என்றும், Somalia, Myanmar, Afghanistan ஆகியவை உலகில் ஊழல்கள் மிகவும் அதிகமாக உள்ள மூன்று நாடுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.