2010-12-08 15:52:12

மத்திய பிரதேசத்தின் கிறிஸ்தவப் பள்ளியில் இந்து அடிப்படைவாதக் குழுவினரின் தாக்குதல்


டிச.08, 2010. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு கிறிஸ்தவப் பள்ளி இச்செவ்வாயன்று இந்து அடிப்படை வாதக் குழுவினரால் தாக்கப்பட்டது.
ஜபல்பூரில் உள்ள St Mary's உயர்நிலைப் பள்ளியில் அத்து மீறி நுழைந்த ஒரு இந்து தீவிரவாத அமைப்பு, அங்குள்ள இருக்கைகளையும், சுவரில் மாட்டப்பட்டிருந்த அன்னை மரியாவின் படத்தையும் சேதப்படுத்தினர்.
அப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்ததால், அவர்களது பெற்றோரின் சம்மதத்துடன் அவர்கள் பத்து நாட்கள் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து அப்பள்ளியில் நுழைந்த இக்குழுவினர் வன்முறையில் ஈடுபட்டனர் என்று பள்ளி முதல்வர் அருள்தந்தை K J Louis கூறினார்.
இந்த வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டித்த ஜபல்பூர் ஆயர் Gerald Almeida, மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் வெறுப்பு முயற்சிகளுக்கு இந்தச் செயலும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் இம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த பின் அம்மாநிலத்தில் இதுவரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 180க்கும் மேற்பட்ட வன்முறைச் செயல்கள் நடந்திருக்கின்றன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.25 ஆண்டுகளாக ஜபல்பூரில் சேவை செய்து வரும் St Mary's பள்ளியில் தற்போது 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.