2010-12-08 15:52:24

அமைதியின் அடிப்படையில் காங்கோ நாடு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் பதிய கர்தினால் உரை


டிச.08, 2010. அமைதி, ஒப்புரவு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் காங்கோ நாடு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று கர்தினால் Laurent Monsengwo Pasinya கூறினார்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் திருத்தந்தையால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட Pasinya, காங்கோ நாட்டின் Kinshasa திறந்த வெளி அரங்கத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு கூறினார்.
அரசு அதிகாரிகளும், பிறத் தலைவர்களும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து, மக்களின் முன்னேற்றத்தில் இன்னும் ஆர்வம் காட்டினால், காங்கோ நாடு அமைதியும் முன்னேற்றமும் காணும் அழகிய நாடாகும் என்று கர்தினால் Pasinya அழைப்பு விடுத்தார்.
இத்திருப்பலியில் காங்கோ நாட்டின் அரசுத் தலைவர் Joseph Kabila, அமைச்சர்கள், மற்ற அரசியல் தலைவர்கள், அயல் நாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.இதற்கிடையே, நவம்பர் மாதம் காங்கோவில் கொலை செய்யப்பட்ட அருள்தந்தை Christian Bakulene கொலையின் தொடர்பாக இரு முன்னாள் இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.