2010-12-07 15:08:20

மத சகிப்பற்றதன்மைகளை கண்டிக்கின்றனர் சுவிஸ் ஆயர்கள்.


டிச 07, 2010. சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் கிறிஸ்தவ மத அடையாளங்கள் இருப்பதற்கு ஒரு சில குழுக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

பொது இடங்களில் சிலுவைகளைத் தடை செய்வது, சகிப்புத்தன்மையின் அடையாளமல்ல, மாறாக அது சகிப்பற்றதன்மைகளின் அடையாளம், ஏனெனில் கிறிஸ்தவ விசுவாசம் வெளிப்படையாக அறிக்கையிடப்படுவதை அது தடுக்கிறது என அறிவித்துள்ளது சுவிஸ் ஆயர் பேரவை.

மத நம்பிக்கைகளைத் தனி அறைகளுக்கு எனக் கட்டுப்படுத்தும் போக்கு குறித்து கண்டனத்தை வெளியிடும் ஆயர்கள், மக்களின் நம்பிக்கைகள் அனைவராலும் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.