2010-12-07 15:14:03

தேவநிந்தனைச் சட்டத்தைத் தக்க வைக்கும் பாகிஸ்தான் அரசின் முயற்சிக்கு ஆயர் கண்டனம்.


டிச.07,2010.கிறிஸ்தவ மதத்தைக் குறித்து அவதூறாகப் பேசுபவர்களும் தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்ற பாகிஸ்தான் அரசின் சட்டத்திருத்த பரிந்துரை குறித்து தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் லாகூர் ஆங்கிலிக்கன் ஆயர்.

தேவ நிந்தனை தண்டனைத்தீர்ப்புச் சட்டத்தை மாற்றாமல், இத்தகைய மாற்றங்கள் மூலம் கிறிஸ்தவர்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பது மட்டுமல்ல, மேலும் கொடியத் தண்டனைகளுக்கே இது வழிவகுக்கும் என்ற கவலையை வெளியிட்டார் ஆயர் அலெக்ஸாண்டர் ஜான் மாலிக்.

இயேசுவின் கௌரவத்தைக் காப்பாற்ற இவ்வுலகச் சட்டங்கள் தேவையில்லை என்ற ஆயர், சட்டம் மூலமே கடவுளைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணப்போக்கு தீவிரவாதிகளுக்கே உதவுவதாக இருக்கும் என மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.