2010-12-07 15:11:08

திருமணத்தின் புனிதத்தன்மை காப்பாற்றப்படுவதற்கு அமெரிக்க மதத்தலைவர்களின் அர்ப்பணம்


டிச 07, 2010. திருமணம் என்பது அனைத்துச் சூழல்களிலும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அர்ப்பணத்தை தெரிவித்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல்வேறு மதத்தலைவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆங்கிலிக்கன், பாப்டிஸ்ட், கத்தோலிக்க, இவாஞ்சலிக்கல், லூத்தரன், மார்மன், ஆர்த்தடாக்ஸ், பெந்தகோஸ்து ஆகிய கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து யூத மற்றும் சீக்கிய மதத்தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள இவ்வறிக்கை, திருமணத்தின் புனிதத்தன்மை காப்பாற்றப்படுவதற்கும் அதன் மாற்றமுடியாத அர்த்தத்திற்குமான மதத்தலைவர்களின் அர்ப்பணத்தை வெளியிடுகிறது.

திருமணப் பந்தம் காப்பாற்றப்படவேண்டும் என்பது மதத்தை திணிப்பதாகாது, மாறாக ஒவ்வொருவரின் பொதுநலனைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகும் என அவ்வறிக்கையில் கையெழுத்திட்ட நியூயார்க் பேராயர் திமோத்தி டோலன் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.