2010-12-07 15:06:46

இந்திய கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த சாட்சியத்திற்கு அழைப்பு விடுக்கிறார் திருப்பீடத்தூதுவர்


டிச 07, 2010. பாரதத்தில் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக விளங்குவதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார் இந்தியாவிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ.

இந்தியாவின் பூனே நகரில் கூடிய ஏறத்தாழ 300 கிறிஸ்தவசபைத் தலைவர்களுக்கு உரையாற்றிய பேராயர், கிறிஸ்தவர்களிடையேயானப் பிரிவினைகள், இயேசுவின் விருப்பத்திற்கு எதிரானது மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றுவது என்றார்.

உண்மைக்கு நம்மைத் திறப்பதன் வழி கிறிஸ்தவ ஐக்கியத்தை விரைவு படுத்தமுடியும் என்ற பேராயர் பென்னாக்கியோ, கிறிஸ்தவ ஐக்கியம் என்பது நம் கடமையாகிறது என்றார்.

பூனே மறைமாவட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்தவசபைகளின் கூட்டத்திற்கு 'கிறிஸ்துவை பின்பற்றுபவர்களே ஒன்றிணையுங்கள்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டிருந்தது.

இதே மறை மாவட்டம் 'வளர்ச்சி மற்றும் அமைதிக்கான மதம்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த மதங்களிடையேயான பிறிதொரு கூட்டத்தில் இந்து, இஸ்லாம், சீக்கியம் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்







All the contents on this site are copyrighted ©.