2010-12-06 15:12:21

டிசம்பர் 07 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கிமு 43 – உரோமை அரசியல்வாதியும் எழுத்தாளருமான மார்க்குஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டார்.

1900 - மாக்ஸ் பிளாங்க் தனது பெர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.

1965 – கத்தோலிக்கத் திருச்சபையும், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ சபையும் 1054 ம் ஆண்டில் ஒன்று மற்றதன் மீது விதித்திருந்த தடையை, திருத்தந்தை 6ம் பவுலும் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை அத்தனாகோரசும் ஒரே நேரத்தில் நீக்கினர்.

1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1975 -- கிழக்குத் திமோரை இந்தோனேசியா ஆக்ரமித்தது.

1988 - அர்மீனியாவில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு நான்கு இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

இதே ஆண்டில் யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.

1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் வியாழனை அடைந்தது








All the contents on this site are copyrighted ©.