2010-12-06 15:47:10

ஒப்புரவு மற்றும் அமைதிக்கான திருத்தந்தையின் அழைப்பு


டிச.06, 2010. மேலும், இந்நாட்களில் வன்முறை, சகிப்பற்றதன்மை மற்றும் துன்ப துயர்களால் வேதனைகளை அனுபவிக்கும் மக்களுக்காக இத்திருவருகைக்காலத்தில் ஜெபிக்குமாறு அழைப்பு விடுத்தார் பாப்பிறை.

இறைமகனின் வருகைக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நாம், இவ்வுலகில் வன்முறையாலும் சகிப்பற்ற நிலைகளாலும் துன்பங்களை அனுவித்துவரும் மக்களுக்கான ஆறுதலையும் ஒப்புரவையும் அமைதியையும் இயேசு கிறிஸ்து கொணரவேண்டும் என ஜெபிப்போம் என்ற அழைப்பையும் விடுத்தார் அவர்.

ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான தாக்குதல்கள், மரணங்களைக் கொணர்ந்துள்ள எகிப்தின் மோதல்கள், எரிட்ரியாவிலும், சீனாய் பாலைவனத்திலும் மக்கள் பிணையக்கைதிகளாய் கடத்தப்பட்டுள்ளது ஆகியவைகளை தன் மூவேளை ஜெப உரையின்போது எடுத்துரைத்து கவலையை வெளியிட்டார் திருத்தந்தை.

சமூகத்தின் ஒன்றிணைந்த வாழ்வுக்கு மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டியது இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்திய பாப்பிறை, துன்புறுவோருக்கான நம்பிக்கையை நம் ஜெபங்கள் மூலமும் ஒருமைப்பாட்டு உணர்வு மூலமும் கொணரமுடியும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.