2010-12-04 15:28:58

வீட்டு வேலை செய்யும் குடியேற்றதாரர்களின் பாதுகாப்புக்கானப் புதிய வழிகாட்டிக்கு காரித்தாஸ் வரவேற்பு


டிச.04,2010. உலக அளவில் வீட்டு வேலை செய்யும் குடியேற்றதாரர்களின் பாதுகாப்புக்கெனக் குடியேற்றதாரர்க்கான ஐ.நா.குழு கொண்டு வந்துள்ள புதிய வழிமுறைகள் குறித்துத் தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளது சர்வதேச காரித்தாஸ் அமைப்பு.

அனைத்து குடியேற்றதாரர்களின் உரிமைகளின் பாதுகாப்பு குறித்த 1990ம் ஆண்டின் சர்வதேச ஒப்பந்தத்தை விளக்குவதாய் இந்த வழிமுறைகள் இருக்கின்றன என்று காரித்தாஸ் கூறியது.

இவ்வியாழனன்று கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய நடவடிக்கை, அனைத்துலக தொழில் நிறுவனம் அனைத்து வீட்டுப் பணியாளர்களுக்குமென 2011ம் ஆண்டு ஜூனில் கொண்டுவரவுள்ள உரிமைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு உதவும் என்றும் காரித்தாஸ் கருத்துத் தெரிவித்தது.

குடியேற்றதாரர் உரிமைகளின் பாதுகாப்பு குறித்த 1990ம் ஆண்டின் சர்வதேச ஒப்பந்தம், ஒன்பது முக்கிய சர்வதேச மனித உரிமைகள் உடன்பாடுகளில் ஒன்றாகும்.

சில நாடுகளிலுள்ள குடியேற்றதாரப் பணியாளருள் சுமார் 10 விழுக்காட்டினர் வீட்டு வேலை செய்பவர்கள் ஆவர்.







All the contents on this site are copyrighted ©.