2010-12-04 15:31:33

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்துவது ஏழ்மைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் - ஐ.நா அதிகாரிகள்


டிச.04,2010. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்துவது ஏழ்மைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் என்று ஐ.நா அதிகாரிகள் கூறினர்.

டிசம்பர் 3ம் தேதி அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாள் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு ஐ.நா.பொதுச் செயலரும் ஐ.நா.மனித உரிமைகள் நிறுவன இயக்குனரும் இவ்வாறு கூறினர்.

உலகில் சுமார் 65 கோடிப் பேர் மாற்றுத் திறனாளிகள். வளரும் நாடுகளில் சுமார் 20 விழுக்காட்டு மாற்றுத் திறனாளிகள் வறுமையில் வாழ்கின்றனர். இவர்களின் ஏழ்மையை அகற்ற அரசுகள் ஆவன செய்யுமாறு ஐ.நா.மனித உரிமைகள் நிறுவன இயக்குனர் நவநீதம்பிள்ளை கேட்டுக் கொண்டார்.

21ம் நூற்றாண்டின் முதல் புதிய ஐ.நா.மனித உரிமைகள் ஒப்பந்தமாக வெளிவந்த மாற்றுத் திறனாளிகள் குறித்த உடன்பாடு 2008ம் ஆண்டு மே மாதம் அமலுக்கு வந்தது. இதில் இதுவரை 147 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும் 96 நாடுகளே அமல்படுத்தியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.