2010-12-03 15:38:51

துருக்கி நாட்டில் ஆயர் Luigi Padoveseஐக் கொலை செய்தவர் மன நிலை சரியில்லாதவர் என்று தீர்ப்பு


டிச.03, 2010. கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி துருக்கி நாட்டில் Anatolia மறைமாவட்ட ஆயர் Luigi Padoveseஐக் கொலை செய்த அவரது வாகன ஓட்டுனர் Murat Altun மன நிலை சரியில்லாதவர் என்று துருக்கி நாட்டின் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
துருக்கி தலத் திருச்சபையும், மக்களின் கருத்துக்களும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக இருந்தாலும், நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பேச முடியாத நிலையில் அவர்கள் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தக் கொலைக்கு முன்னதாக Murat Altun பல மனநல மருத்துவர்களின் கருத்துக்களைக் கேட்ட போது, அவர்கள் அனைவரும் அவர் நல்ல மன நிலையில்தான் இருக்கிறார் என்று சொன்னதைச் சுட்டிக் காட்டினார் Izmir உயர்மறைமாவட்டப் பேராயர் Ruggero Franceschini.
ஆயர் Padovese ஓர் இத்தாலியர் என்பதால், வத்திக்கான், இத்தாலிய அரசு ஆகியவை இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பலாம் என்றும், அப்படியே அவர்கள் தலையிட்டாலும், துருக்கி நாடு அவர்களது கருத்துக்களைக் கேட்கும் நிலையில் இல்லை என்றும் பேராயர் விளக்கினார்.வாகன ஓட்டுனர் ஆயர் Padoveseஐக் கொலை செய்தபோது, அல்லாவின் பெயரை உரக்கக் கூறினார் என்றும், அவர் கொலை செய்த விதம் இஸ்லாமிய சடங்குகளை நினைவுபடுத்தும் விதமாக அமைதிருந்ததேனவும் சாட்சிகள் கூறியிருந்தனர்.







All the contents on this site are copyrighted ©.