2010-12-03 15:27:07

டிசம்பர் 04. நாளும் ஒரு நல்லெண்ணம்


நல்ல விஷயத்தைத் தள்ளிப் போடாதே; கெட்டது செய்யணுமா அதனை தள்ளி வைத்து விடு " என்பார்கள்.

நம்மை கீழே இழுக்கும் குணங்களுள் முக்கியமான ஒன்று, தயக்கம்!!

பல நேரங்களில் தடைகள், எல்லைகள் என்பவை நாமாக மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்பவையே.

உண்மையில் மனிதன் " என்னால் இது முடியும்; முடியாது" என தானாக தனக்கு எல்லைகள் ஏற்படுத்திக் கொள்கிறான். மனிதனின் திறமைக்கும் சாதனைகளுக்கும் எல்லைகளே இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தயக்கம் இன்றி தைரியமாகச் செல்லும் போது பெரும்பாலும் வெற்றியை நாம் சந்தித்தே தீருவோம்.

"ஆயிரம் மைல் பயணம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில் தொடங்குகிறது” என்று ஒரு பழமொழி உண்டு.

சில வேலைகளைத் துவங்கும் போது அதனை முழுமையாய் எப்படி செய்து முடிப்பது என்பது குறித்த ஒரு தெளிவான எண்ணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து போக போக அதனை எப்படி முடிப்பது என்ற தெளிவு வந்து விடும்.

ஆகவே, தயக்கமின்றிச் செயல்படுவோம். நாளைக்கு என்று எதையும் தள்ளிப் போட வேண்டாம். நாளை என்பது இன்று என்றாகுமேயொழிய, நாளை என்பது, தூரத்தில் தெரியும் வானம் தொடும் பூமியே.








All the contents on this site are copyrighted ©.