2010-12-02 15:48:44

அகில உலக கத்தோலிக்கப் பங்குத்தள இளையோர் ஆசிய கருத்தரங்கின் முடிவுகள்


டிச.02, 2010. ஆசிய நாடுகளின் பங்குத்தளங்களில் உள்ள இளையோர் குழுக்கள் பருவ நிலை மாற்றம், மறைபரப்புப் பணி, மற்றும் இளையோரை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இன்னும் ஆர்வமாய் ஈடுபட முடிவெடுத்துள்ளன.
அகில உலக கத்தோலிக்கப் பங்குத்தள இளையோர் ஒருங்கிணைப்பான FIMCAP அண்மையில் இலங்கையின் Chilawவில் நடத்திய ஆசிய கருத்தரங்கின் இறுதியில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.
உலகின் 20 நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு ஆசியாவில் இந்தியா, இலங்கை, பிலிப்பின்ஸ் என்ற மூன்று நாடுகளில் மட்டுமே இயங்கி வருவதால், இந்த அமைப்பினை ஆசியாவின் இன்னும் பிற நாடுகளில் அறிமுகம் செய்யும் வழிகள் இக்கருத்தரங்கில் பேசப்பட்டன என்று இவ்வமைப்பின் ஆசிய ஒருங்கிணைப்பாளரான Ranajana D'Silva கூறினார்.பருநிலை மாற்றங்கள் குறித்த இளையோரின் நடவடிக்கைகளில் இலங்கையும், மறைபரப்புப் பணிகளில் இந்தியாவும் இளையோரை ஒருங்கிணைக்கும் பணிகளில் பிலிப்பின்சும் வரும் ஆண்டு ஈடுபடும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.