2010-12-02 15:47:41

Hungary நாட்டின் புதியத் தூதர் திருத்தந்தையுடன் சந்திப்பு


டிச.02, 2010. Hungary நாட்டின் ஏறத்தாழ 45 ஆண்டு கால கம்யூனிச ஆட்சியின் கீழ் அடைந்த காயங்களை அமைதி, சுதந்திரம் மற்றும் மனித மாண்பிற்கான மதிப்பு மூலம் குணப்படுத்த முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான Hungary நாட்டின் புதியத் தூதர் Gabor Gyorivanyi யிடமிருந்து இவ்வியாழனன்று நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றிய பாப்பிறை, 1990ம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கிடையே மீண்டும் துவக்கப்பட்ட அரசியல் உறவின் மூலம் Hungary சமூகம் கத்தோலிக்கத் திருச்சபையுடன் நம்பிக்கையையும் நல்செயற்பாடுடைய பேச்சு வார்த்தைகளையும் கொள்ள முடிந்துள்ளது என்றார்.
Hungaryன் வரலாற்றின் ஆயிரமாம் ஆண்டில் அந்நாட்டு இளவரசர் தன் மணி முடியைத் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டரிடம் இருந்து பெற்றதையும் பாப்பிறை 16ம் பெனடிக்ட் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய சமுதாய அவையில் இணைந்துள்ள Hungary நாடு, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்கு இடையே பாலமாக இருப்பதற்கான வாய்ப்பையும் சுட்டிக் காட்டி, கிறிஸ்தவ மதிப்பீடுகள், குறிப்பாக, திருமணம் மற்றும் வாழ்வு பாதுகாப்பு குறித்த மதிப்பீடுகள் மதிக்கப்படுவதில் Hungaryன் அர்ப்பணத்தையும் வலியுறுத்தினார்.உலக மயமாக்கலின் அதிகரிப்பு என்பது நம் ஒவ்வொருவரையும் அண்டை வீட்டார்களாக மாற்றியுள்ளதே தவிர, சகோதரர்களாக மாற்றவில்லை என்ற கவலையையும் திருத்தந்தை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.