2010-12-01 15:56:28

திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertoneயின் Kazakhstan மேய்ப்புப்பணி பயணம்


டிச.01, 2010 ஐரோப்பாவின் பாதுகாப்பு, மற்றும் கூட்டுறவு அமைப்பு இப்புதன் வியாழன் ஆகிய நாட்களில் Kazakhstan நாட்டின் Astanaவில் நடத்தும் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone தலைமையில் உயர்மட்டக் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.
கர்தினால் Bertone உடன், வெளிநாட்டு உறவுகளுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் Dominique Mamberti, மற்றும் Kazakhstanக்கான திருப்பீட தூதர் பேராயர் Miguel Maury Buendia ஆகியோரும் அங்கு சென்றுள்ளனர்.இக்கூட்டத்தின் முடிவில் இவ்வெள்ளி, சனிக் கிழமைகளில் Kazakhstanல் தன் மேய்ப்புப்பணி பயணத்தையும் திருப்பீடச் செயலர் கர்தினால் Bertone மேற்கொள்வார் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.