2010-12-01 15:57:42

இயேசு சபைக் குருவுக்கு இந்தோனேசிய அரசின் விருது


டிச.01, 2010 ஒவ்வோர் ஆண்டும் இந்தோனேசிய அரசு வழங்கும் Habibie விருதினை 2010ம் ஆண்டுக்கென இயேசு சபைக் குரு Franz Magnis Suseno இச்செவ்வாயன்று பெற்றுக் கொண்டார்.
இந்தோனேசியாவில் பல் சமய உரையாடல், மற்றும் மத நல்லிணக்கம் இவைகளுக்காக உழைத்த இயேசு சபைக் குரு Susenoவுக்கு இந்தோனேசிய துணை அரசுத் தலைவர் Boediono இச்செவ்வாயன்று மத்திய ஜகார்த்தாவில் நடைபெற்ற ஒரு விழாவில் இவ்விருதினை வழங்கினார்.
அருள்தந்தை Suseno 1936ல் ஜெர்மனியில் பிறந்தவர். 1967ம் ஆண்டு இந்தோனேசியாவில் குருப்பட்டம் பெற்றார். 1977ம் ஆண்டு அவருக்கு இந்தோனேசியக் குடியுரிமை வழங்கப்பட்டது.இந்தோனேசியாவின் மூன்றாம் அரசுத் தலைவரான Bacharuddin Jusuf Habibieன் நினைவாக நிறுவப்பட்டுள்ள Habibie விருது அறிவியல், மருத்துவம், சமூதாய நலன், பொருளாதாரம் என்று பல துறைகளிலும் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.