2010-11-30 16:29:44

டிசம்பர் 01 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1581 - இயேசு சபை குரு புனித Edmund Campion மறை சாட்சியாக உயிர் துறந்தார். டிசம்பர் 1 இப்புனிதரின் திருநாள்.
1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1864 – ஆபிரகாம் லிங்கன் தனது அரசுத் தலைவர் உரையில் அடிமை ஒழிப்பு குறித்து மீண்டும் பாராளு மன்றத்தில் வலியுறுத்தினார்.
1954 - இந்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர் பிறந்தார்.
1959 - அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும், அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தவும் ஒப்பந்தம் நிறைவேறியது.
1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971 - இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைக் கைப்பற்றியது.
1973 - பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
1981 - எயிட்ஸ் நோய் அதிகாரபூர்வமாகக் கண்டறியப்பட்டது. எனவே, டிசம்பர் முதல் தேதி உலக எய்ட்ஸ் நாள்.1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.