2010-11-30 16:03:16

காசாவின் அப்பாவி பொது மக்களுக்கு எதிரான தடைகளை நீக்க சர்வதேச சமுதாயத்தின் முயற்சிகளுக்கு வேண்டுகோள்


நவ 30, 2010. வெளித் தொடர்புகளிலிருந்து காசா பகுதியைச் சட்டவிரோதமாக துண்டித்து வைத்திருக்கும் இஸ்ரயேலின் நடவடிக்கை குறித்த சர்வதேச சமூகங்களின் கண்டனக்குரல்கள் எவ்வித முன்னேற்றத்தையும் கொணரவில்லை என கவலையை வெளியிட்டுள்ளன சர்வதேச மனித உரிமை அமைப்புகள்.

காசாவின் அப்பாவி பொது மக்களுக்கு எதிரான தடைகள் உடனடியாக எவ்வித முன் நிபந்தனையுமின்றி முற்றிலுமாக நீக்கப்படுவதற்கு சர்வதேச சமுதாயம் தன் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்கின்றன அவ்வமைப்புகள்.

இஸ்ரயேலின் தடைகளால் காசா பகுதியின் 15 இலட்சம் பாலஸ்தீனியர்களின் தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மனித உரிமை அவைகளின் சர்வதேச கூட்டமைப்பு, காசா பகுதியின் மொத்த மக்களுள் பாதி பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.