2010-11-29 15:11:53

நவம்பர் 30 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒருமுறை முதியவர் ஒருவர் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். அச்சமயம் அவர் தனது உற்சாகமானப் பேச்சுத் திறமையால் பார்வையாளர்களைக் கவர்ந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி அரங்கமே சிரிப்பால் அதிர்ந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அதனை நடத்திய இயக்குனர் அந்த வயதானவரிடம் வந்து, ஐயா, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான மனிதர் என்பதை உங்களைப் பார்க்கும் போதே தெரிகின்றது. அதன் இரகசியம் என்ன என்று கேட்டார். அதற்கு அவர், மகனே, உனது முகத்தில் உனது மூக்கு இருப்பது போன்று இந்த இரகசியம் மிகவும் வெளிப்படையானது. நான் காலையில் எழுந்திருக்கும் போது இரண்டு காரியங்கள் என்முன் நிற்கும். ஒன்று இன்று நான் மகிழ்ச்சியாக இருப்பது. அடுத்தது இன்று நான் மகிழ்ச்சியற்று இருப்பது. எனது இப்போதைய இந்த வயதான தோற்றமென்றால் எனக்குக் காது கொஞ்சம் மந்தம் போல் எண்ண வைக்கலாம். ஆனால் நான் அப்படியல்ல. நான் மகிழ்ச்சியாக இருப்பதையேத் தினமும் தேர்ந்தெடுப்பேன். அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கானச் செயல்களைத் தினமும் செய்வேன். அவ்வளவுதான் என்றார்.
ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதையும் அதனை இழந்து இருப்பதையும் முடிவு செய்வது அவரவர் மனம்தான். நல்ல எண்ணங்களும், நம்பிக்கைகளும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவும் நல்ல கருவிகள். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்.







All the contents on this site are copyrighted ©.