2010-11-27 15:44:29

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட இந்தோனேசிய கத்தோலிக்கர்களின் அமைதிப்போராட்டம்


நவ 27, 2010. இந்தோனேசியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு தங்கள் கண்டனத்தை வெளியிடும் விதமாக அந்நாட்டு அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து அமைதிப்போராட்டம் ஒன்றை மெற்கொண்டுள்ளனர் இந்தோனேசிய கத்தோலிக்கர்கள்.

இந்தோனேசிய கத்தோலிக்க மறைமாவட்டங்களின் நீதி மற்றும் அமைதி அவைகளுடன் இணைந்து 37 அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன.

இந்த அமைதி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கருத்தரங்குகள், உரைகள், கருத்துப்பரிமாற்றங்கள், பாதிக்கப்பட்டோருக்கான நிதி உதவி திரட்டல்கள் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இந்தோனேசியாவில் 2,95,836 வன்முறை நிகழ்வுகள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 91,311 நிகழ்வுகள் பாலின நடவடிக்கையோடு தொடர்புடையவை.








All the contents on this site are copyrighted ©.