2010-11-26 14:55:54

இறையியலாளர் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் படிப்பினைகளின் ஆய்வுக்கான புதிய அமைப்பு


நவ.26, 2010. இறையியல் கல்வியின் முக்கியத்துவத்தை மேலும் அறிய வைப்பதை ஊக்குவிக்கும் வண்ணம் துவக்கப்பட்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பெயரிலான புதிய நிறுவனம் குறித்து இவ்வெள்ளி காலை பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தனர் திருச்சபை அதிகாரிகள்.
திருச்சபை விதிகளுக்கு இணங்க இயங்கும் வண்ணம் இவ்வாண்டு மார்ச் முதல் தேதி ஒப்புதல் பெற்று துவக்கப்பட்ட திருத்தந்தை பெயரிலான இந்த வத்திக்கான் நிறுவனம், இறையியல் கல்வியை ஊக்குவிப்பது, கலாச்சார மற்றும் அறிவியல் மதிப்பீடுகளை ஒருங்கிணைப்பது, அறிவியல் பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி கௌரவித்தல் ஆகியவைகளைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.திருத்தந்தையின் இறையியல் கருத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ள இந்த வத்திக்கான் அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, இவ்வமைப்பின் அறிவியல் அவையின் தலைவர் கர்தினால் கமிலோ ரூயினி, இந்நிறுவன தலைவர் பேரருட்திரு ஜுசப்பே அந்தோனியோ ஸ்கோத்தி, மற்றும் ஜெர்மனியில் 2007ல் துவக்கப்பட்ட இத்தகைய அமைப்பின் தலைவர் குரு இஸ்டெஃபான் ஓட்டோ ஹான் ஆகியோர் திருத்தந்தை 6ம் சின்னப்பர் மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்நிறுவனம் குறித்து விளக்கினர்.







All the contents on this site are copyrighted ©.