2010-11-25 15:17:45

நிலக்கரி கொண்டு இயக்கப்படும் மின்சக்தி நிலையங்களுக்கு பிலிப்பின்ஸ் ஆயர் எதிர்ப்பு


நவ.25, 2010. நிலக்கரி கொண்டு இயக்கப்படும் மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு பிலிப்பின்ஸ் ஆயர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அயல் நாட்டு தொழில் நுட்பத்துடன் பிலிப்பின்சின் இரு தீவுகளில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அந்நாட்டின் அரசு ஆரம்பிக்க இருக்கும் மின்சக்தி நிலையங்களுக்கு பிலிப்பின்சின் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெவித்து வரும் வேளையில், இப்புதனன்று Jaro உயர்மறைமாவட்ட பேராயர் Angel Lagdameo தனது எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டார்.நிலக்கரியைக் கொண்டு மின்சக்தி உருவாக்கும் போது, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாலும், பல்வேறு பழங்குடியினரின் நிலங்களில் இந்த நிலக்கரி சுரங்கங்கள் தோண்டப்படுவதால் அவர்களுக்குரிய நிலங்கள் பறிக்கப்படுவதாலும் இத்திட்டத்தை சமூக நீதி ஆர்வலர்களும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பாளர்களும் எதிர்க்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.