2010-11-25 15:18:37

தென் கொரிய Yeonpyeong-do தீவின் ஒரே கத்தோலிக்கக் கோவில் சேதம்


நவ.25, 2010. வட, தென் கொரிய நாடுகளுக்கிடையே இச்செவ்வாயன்று நடைபெற்ற மோதல்களின் விளைவாக, தென் கொரியாவைச் சேர்ந்த Yeonpyeong-do என்ற தீவின் ஒரே கத்தோலிக்கக் கோவில் சேதமடைந்தது.
இந்த குண்டு வீச்சில் கோவில் சன்னல்களும், பங்கு குருவின் இல்லமும், பங்கைச் சேர்ந்த வாகனமும் செதமடைந்துள்ளதென Incheon மறைமாவட்ட அதிகாரி Johannes Kim Yong-hwan கூறினார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 80 விழுக்காட்டு மக்கள் தீவை விட்டு வெளியேறி விட்டனர் என்றும், மீதம் உள்ளவர்களோடு பங்குத் தந்தையும் தீவிலேயேத் தங்கியுள்ளார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.படை பலத்தை நம்பி இரு நாடுகளும் ஒன்றை ஒன்று தாக்குவதால், அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அதனால் பேச்சுவார்த்தை முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டுமென்றும் தென் கொரியத் திருச்சபையின் சார்பில் பேசிய அருள்தந்தை Johannes Kim கூறினார்.







All the contents on this site are copyrighted ©.