2010-11-24 15:47:14

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தி்ருமண வாழ்வுக்கான மக்களின் ஆர்வம் அதிகரிப்பு


நவ.24,2010. இந்நவீன உலகில் திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றன அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்க மறைமாவட்டங்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் தி்ருமணத்தின் முக்கியத்துவத்தை அதிகமாக உணர்ந்து வருவதாகவும், இதற்கு ஆதரவு தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

1978ஆம் ஆண்டில் 28 விழுக்காடாக இருந்த இவ்வெண்ணிக்கை தற்சமயம் 39 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் அண்மையில் பியூ ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.