2010-11-23 15:23:39

வட மற்றும் தென்கொரிய அண்மை மோதல் குறித்து தென்கொரிய திருச்சபைத் தலைவர்கள் கண்டனம்


நவ 23, 2010. தென்கொரியாவின் மீதான வட கொரியாவின் அண்மை இராணுவத் தாக்குதல் குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் தென்கொரிய திருச்சபைத் தலைவர்கள்.

இச்செவ்வாய் காலை வடகொரிய எல்லையிலிருந்து நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதல்கள் இரு நாடுகளிடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தாக்குதல்களின் மத்தியிலும் தென்கொரியா பொறுமை காத்து பேச்சு வார்த்தைகளை ஊக்குவிக்க முன் வரவேண்டும் என்றும் தென்கொரிய தலத்திருச்சபை அதிகாரி குரு ஜோனஸ் கிம் யோங் ஹுவான் கூறினார்.

தென்கொரியாவும் தற்போது திருப்பித் தாக்கத்துவக்கியுள்ளதைத் தொடர்ந்து இரு பக்கங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளோர் அப்பாவி பொதுமக்களே என உரைத்த கொரிய ஆயர் பேரவையின் அதிகாரி குரு ஜான் கிம் குன் இல், வடகொரியா எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி தன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும், மற்றும் தென் கொரியாவும் எதிர்தாக்குதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முன் வரவேண்டும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.