2010-11-23 15:27:27

பாலஸ்தீனிய கிறிஸ்தவ இளைஞர்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ்வதையே விரும்புகின்றனர்.


நவ 23, 2010. சரியான வாய்ப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் வேறுநாடுகளுக்குக் குடியேறாமல் தங்கள் சொந்த நாட்டில் வாழ்வதையே பாலஸ்தீனியக் கிறிஸ்தவ இளைஞர்கள் விரும்புவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எருசலேமின் கிறிஸ்தவ நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அவை அண்மையில், பாலஸ்தீனத்தின் படித்த கிறிஸ்தவ இளைஞர்களிடையே நடத்திய ஆய்வு ஒன்றில், அப்பகுதியின் இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், போதிய வேலை வாய்ப்புகள், கல்வி மற்றும் வீட்டு வசதிகளுக்கென திருச்சபையின் உதவிகளை நாடி நிற்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கிறிஸ்தவ விசுவாசத்திற்கான தங்கள் மத அர்ப்பணத்தையும் பாலஸ்தீன கிறிஸ்தவ இளைஞர்கள் அவ்வாய்வின்போது வெளியிட்டனர்.

இவ்வாய்வு குறித்து கருத்துக்களை வெளியிட்ட பாலஸ்தீனர்களுக்கான திருப்பீட அவையின் எருசலேம் அதிகாரி சமி எல் யூஸூஃப், கிறிஸ்தவர்கள் சமூகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக மாற ஊக்கமளிப்பதே தலத்திருச்சபையின் நோக்கமாக இருக்கும் என்றார்.








All the contents on this site are copyrighted ©.