2010-11-23 15:27:15

ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க ஐக்கிய நாடு ஏற்க மதத்தலைவர்கள் அழைப்பு


நவ 23, 2010. ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டு செனட் அவை இவ்வாண்டு இறுதிக்குள் கையெழுத்திட வேண்டியது உலக வருங்காலத்திற்கும் அதன் பாதுகாப்பிற்கும் மிகவும் இன்றியமையாதது என அந்நாட்டு கத்தோலிக்க மற்றும் ஏனைய மதத்தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்க செனட் அவையின் வெளிநாட்டு உறவுகளுக்கான அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இவ்வொப்பந்தம் தற்போது முழு செனட் அவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

அணு ஆயுதத்தின் அச்சுறுத்தல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபை, மனித வாழ்வு மற்றும் மாண்பைக் காப்பதற்கான அர்ப்பணத்தின் வெளிப்பாடாக ஆயுதக் களைவை வலியுறுத்தி வருவதாகக் கூறினர் அந்நாட்டு ஆயர்கள்.

உலகில் அணுஆயுதங்களைக் களைவதற்கு முன்னோடியாக இருக்க அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர் அந்நாட்டின் மதத்தலைவர்கள்







All the contents on this site are copyrighted ©.