2010-11-19 16:10:16

மியான்மார் சமயத் தலைவர்கள் - எய்ட்ஸ் நோய்க் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் சமயக் கல்வி முக்கிய இடம் வகிக்கின்றது


நவ.19,2010. மியான்மாரில் எய்ட்ஸ் நோய்க் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் சமயக் கல்வி முக்கிய இடம் வகிக்கின்றது என்று அந்நாட்டுச் சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

எய்ட்ஸ் குறித்த மியான்மார் பல்சமய அமைப்பு இவ்வியாழனன்று ரங்கூனில் நடத்திய கூட்டம் பற்றிப் பேசிய அருட்திரு பீட்டர் ஜோசப், பல்வேறு மதங்கள் மத்தியில் புரிந்து கொள்ளுதலையும் பரஸ்பர மதிப்பையும் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுமார் நூறு பல்சமயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மியான்மாரில் அண்மையில் நடந்த தேர்தல்கள் குறித்தத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் குழு, அத்தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இடம் பெறவில்லை என்று குறை கூறியது.

மியான்மார் ஜனநாயக ஆதரவுத் தலைவர் ஆங் சாங் சூ கி யின் விடுதலையை வரவேற்றுப் பேசிய அக்குழு, ஜனநாயகம் குறித்து சூ கி அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.