2010-11-19 16:08:35

இந்தியத் திருச்சபை - நிமோனியாவால் சிறார் இறப்பதைத் தடுக்க நடவடிக்கை


நவ.19,2010. இந்தியாவில் நலவாழ்வுத் துறையில் நவீனத் தொழிற்நுட்ப வசதிகள் இருக்கின்ற போதிலும் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளால் சிறார் இறப்பது கவலை தருவதாக இருக்கின்றது என்று திருச்சபை நலவாழ்வு ஆர்வலர்கள் கூறினர்.

நிமோனியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுப்பதற்குத் திருச்சபை ஒத்துழைப்பு தர முன்வந்தாலும் ஆரம்பச் சுகாதார வசதிகள் குறைபடுகின்றன என்று இந்திய ஆயர் பேரவையின் நலவாழ்வு ஆணைக்குழுவின் அருட்திரு Mathew Abraham Puthenchirayil கூறினார்.

உலகில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் இறப்புக்கு முக்கிய நோயாக இருக்கும் நிமோனியாவால் ஆண்டுதோறும் சுமார் 16 இலட்சம் இறப்புக்கள் ஏற்படுகின்றன. இவ் விறப்புக்களில் நான்கில் ஒரு பகுதி இந்தியாவில் இடம் பெறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.