2010-11-18 15:19:17

திருத்தந்தை : கிறிஸ்தவர்களுக்கிடையேயான ஒன்றிப்பு மேலிருந்து வருவது


நவ.18,2010. “கிறிஸ்தவ ஒன்றிப்பு பேச்சுவார்த்தைகளின் புதிய படியை நோக்கி” என்ற தலைப்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கானத் திருப்பீட அவை நடத்தும் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோரைத் திருப்பீடத்தில் இவ்வியாழனன்று சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

1960ம் ஆண்டு திருத்தந்தை 23ம் அருளப்பரால் துவக்கப்பட்டு தற்போது ஐம்பதாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் திருப்பீடக் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை, கடந்த காலங்களில் தொடர்ந்து இறையியல், திருவழிபாடு மற்றும் ஆன்மீக விடயங்களில் ஏனையக் கிறிஸ்தவர்களுடன் ஒன்றிப்பைக் காண உழைத்து வந்துள்ளதையும் பாராட்டினார் திருத்தந்தை.

இன்றையக் காலச் சூழல்களின் பிரச்சனைகளின் மத்தியில் பேச்சுவார்த்தைகளும் ஒன்றிப்புப் பாதையும் தொடர்வதற்கான நம் அர்ப்பணமும் தடைபடுவது போல் காணப்படுவது குறித்த அக்கறையையும் வெளியிட்ட திருத்தந்தை, அனைத்து ஒன்றிப்பும் உண்மை என்பதில் கண்டு கொள்ளப்படுவதாகவும், செபம் மற்றும் ஒறுத்தல் முயற்சிகளின் தேவையை உணர்ந்ததாகவும் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என மேலும் விண்ணப்பித்தார்







All the contents on this site are copyrighted ©.