2010-11-18 15:20:19

கிறிஸ்தவர்களையும், இந்துக்களையும் இணைக்கும் பாலம் Konkan Kristapurana என்ற காவியம்


நவ.18, 2010. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு சபை குரு Thomas Stephens எழுதிய ஒரு காவியம் கிறிஸ்தவர்களையும், இந்துக்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்துள்ளதென்று இந்திய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பூனே பல்கலைக் கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கின் துவக்க விழாவில் உரையாற்றிய பூனே ஆயர் Thomas Dabre, இயேசு சபை குரு Stephens எழுதிய Konkan Kristapurana என்ற காவியத்தின் அடிப்படைக் கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

உலகின் அனைத்து மதங்களும் பல்வேறு கலாச்சாரங்களையும், எண்ணங்களையும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும் என்பதே காவியத்தின் மையக் கருத்து என்று ஆயர் Dabre கூறினார்.

மத அடிப்படைவாதமும், அதன் விளைவாக வன்முறைகளும் பெருகி வரும் இக்காலத்திற்கு Konkan Kristapurana போன்ற நூல்கள் சிறந்த பாடங்களைச் சொல்லித் தருகின்றன என்று இக்காவியத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ள அருள்தந்தை Nelson Falcao கூறினார்.








All the contents on this site are copyrighted ©.