2010-11-18 15:20:47

அகில உலக மத சுதந்திரம் குறித்த 2010ம் ஆண்டிற்கான அமெரிக்க அரசின் அறிக்கை


நவ.18, 2010. அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் வணிகத்தொடர்பு கொண்டுள்ள பல நாடுகளில் மதச்சுதந்திரம் கவலைக் குரிய நிலையில் உள்ளதென்று அந்நாட்டின் அரசு அறிக்கை கூறுகிறது.

அகில உலக மத சுதந்திரம் குறித்த 2010ம் ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்க அரசு இப்புதனன்று வெளியிட்டது. அமெரிக்காவும், அதன் கூட்டு நாடுகளும் தற்போது படைகளுடன் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தானில் மத சுதந்திரம் பெரிதும் குறைந்துள்ளதென்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டங்களிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் சிறுபான்மை மதங்களுக்கு எதிராகச் வெறுப்புணர்வை வளர்க்கும் பேச்சுக்கள், அரசுத் துறைகளில் காட்டப்படும் பாகுபாடுகள், பல நேரங்களில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் ஆகியவை மத சுதந்திரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்க அரசுடன் வணிகம், மற்றும் பல வழிகளில் தொடர்பு கொண்டுள்ள பாகிஸ்தான், சவுதி அரேபியா, எகிப்து, ஈராக், சீனா ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் கவலை தரும் நிலையில் உள்ளதென்று இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.