2010-11-18 15:20:08

Tariq Azizக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பில் தான் கையெழுத்திடப் போவதில்லை - ஈராக் அரசுத் தலைவர்


நவ.18, 2010. ஈராக்கில் சதாம் ஹுசேனுக்குத் துணைப் பிரதமராக இருந்த Tariq Azizக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பில் தான் கையெழுத்திடப் போவதில்லை என்று ஈராக் அரசுத் தலைவர் Jalal Talabani கூறினார்.

பாரிஸ் நகர் சென்றிருக்கும் ஈராக் அரசுத் தலைவர் இப்புதனன்று அங்குள்ள ஒரு தொலைகாட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.

அக்டோபர் 26 அன்று ஈராக் தலைமை நீதி மன்றம் Tariq Azizக்கு மரணதண்டனைக்கான தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, வத்திக்கானும் இன்னும் பிற நாடுகளும் அத்தண்டனையை நிறைவேற்றக் கூடாதென்று ஈராக் அரசுக்கு விண்ணப்பித்திருந்தன.

கிறிஸ்தவரான Tariq Aziz 74 வயதில் உடல் நலம் குன்றியவராய் சிறையில் உள்ளார். எனவே மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த தண்டனையை அளிக்க வேண்டாமென்று வத்திக்கான் வேண்டுகோள் விடுத்திருந்தது.

தான் இந்த மரண தண்டனை தீர்ப்பில் கையெழுத்திட மறுப்பதற்கு இரக்கம் மட்டும் காரணமல்ல, மாறாக, தான் மரண தண்டனையை எதிர்ப்பவர் என்று ஈராக் அரசுத் தலைவர் Jalal Talabani கூறினார்.

ஈராக் அரசுத் தலைவர் கையெழுத்திட மறுப்பது இந்த தூக்கு தண்டனையை நிறுத்தும் சக்தி பெற்றதில்லை என்று பத்திரிக்கைச் செய்திகள் எடுத்துக் காட்டுகளுடன் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.