2010-11-17 15:01:51

மதச்சுதந்திரம் அடிப்படையான மனித உரிமை - கத்தோலிக்க இஸ்லாமிய கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானம்


நவ.17, 2010. மதச்சுதந்திரம் அடிப்படையான மனித உரிமை என்றும், இவ்வுரிமை மனிதரின் மாண்பை நிலைநாட்டும் ஒரு முக்கிய அம்சம் என்றும் ஈரான் நாட்டின் Tehran நகரில் அண்மையில் நடந்து முடிந்த ஒரு கத்தோலிக்க இஸ்லாமிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
'இன்றைய சமுதாயமும், மதமும்: கிறிஸ்தவ, இஸ்லாமிய கண்ணோட்டம்' என்ற மையக் கருத்துடன் நடைபெற்ற இந்த மூன்று நாள் கருத்தரங்கில் திருப்பீடத்தின் மதங்களுக்கிடையேயான உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, மற்றும் இஸ்லாமிய கலாச்சாரமும் பல்சமய உரையாடலும் என்ற அமைப்பின் தலைவர் Mohammad Baqer Khorramshad ஆகியோர் தலைமை வகித்தனர்.
மதம் ஒரு சமுதாயக் கூறு என்பதால், மத சுதந்திரத்தை மதிப்பது அரசின் கடமை என்றும், அச்சுதந்திரத்தை உறுதி செய்யும் முழு பொறுப்பை அரசுகள் ஏற்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தின் இறுதி தீர்மானங்கள் கூறுகின்றன.இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடும் இக்கூட்டம் 2008ம் ஆண்டு உரோமையில் நடைபெற்றதென்றும், இது 2012ம் ஆண்டு மீண்டும் உரோமையில் நடைபெற உள்ளதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.