2010-11-17 15:02:25

புதியத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு நாடு இன்னும் தயாராக இல்லை - Zimbabwe தலத்திருச்சபை


நவ.17, 2010. Zimbabwe நாட்டில் புதியத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு அந்நாடு இன்னும் தயாராக இல்லை என்று தலத்திருச்சபை மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் கூறியுள்ளன.
2011ம் ஆண்டு தேர்தல்களைச் சந்திக்கத் தயாராகுங்கள் என்று Zimbabwe அரசுத்தலைவர் Robert Mugabe தன் ஆதரவாளர்களிடம் அண்மையில் கூறியதைத் தொடர்ந்து, தலத்திருச்சபை தன் கவலையை வெளியிட்டுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் அரசுத்தலைவர் கட்சியினருக்கும், பிரதமரின் கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களை நினைவு கூர்ந்த Zimbabwe கிறிஸ்தவ சபைகளின் குழு, Zimbabwe கிறிஸ்தவ மாணவர் அமைப்பு ஆகியவை தற்போது தங்கள் நாடு தேர்தலைச் சந்தித்தால் இன்னும் பல உயிர்களைப் பறிக்கும் மோதல்கள் நடைபெறும் என்று கூறியுள்ளன.இதற்கிடையே, Zimbabweல் பணி புரியும் ஆங்கலிக்கன் ஆயர்களுக்குப் பல முறை கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன என்று Canterbury பேராயர் Rowan Williamsன் அலுவலகம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.