2010-11-17 15:00:53

பாகிஸ்தானில் ஆசியா பீபிக்கு முழுவிடுதலை வழங்கப்படத் திருத்தந்தை அழைப்பு


நவ.17, 2010. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள Asia Bibi என்ற கத்தோலிக்கப் பெண் எவ்வளவு விரைவில் விடுதலை செய்யப்பட முடியுமோ அவ்வளவு விரைவில் அப்பெண்ணுக்கு முழு விடுதலை வழங்கப்படுமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட சுமார் முப்பதாயிரம் பயணிகள் முன்னிலையில் இவ்வழைப்பை முன்வைத்தத் திருத்தந்தை, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து கவலைப்படும் சர்வதேச சமுதாயத்துடன் தானும் இணைவதாகக் கூறினார்.
திருமதி ஆசியா பீபி மற்றும் அவரது குடும்பத்துடன் தான் ஆன்மீகரீதியில் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகத் தெரிவித்தத் திருத்தந்தை, இப்பெண்ணின் நிலை போன்ற சூழல்களில் வாழ்வோர் தங்களின் மனித மாண்பையும், முழுவதுமாக மதிக்கப்படும் அடிப்படை உரிமைகளையும் பெற வேண்டுமென்று தான் செபிப்பதாகவும் கூறினார்.ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ஆசியா பீபி, ஒரு முஸ்லீம் பெண்கள் குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஓராண்டளவாக விசாரிக்கப்பட்டு தேவநிந்தனை சட்டத்தின்கீழ் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.