2010-11-16 15:41:06

ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க தலத்திருச்சபைகளிடையேயான மேலும் நெருங்கிய ஒத்துழைப்பு


நவ 16, 2010. ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்கத் தலத்திருச்சபைகள் மேலும் நெருக்கமான ஐக்கியத்திலும், ஒத்துழைப்பிலும், மேய்ப்புப்பணி ஒருமைப்பாட்டிலும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை இவ்விரு கண்டத்தின் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐவரி கோஸ்ட் நாட்டில் இவ்விரு கண்டத்தின் ஆயர்களும் அண்மையில் நடத்திய நான்கு நாள் கருத்தரங்கிற்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், இருகண்டங்களிடையே குருக்களைப் பரிமாறுதல், குருக்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் தேவ அழைத்தல்களை ஊக்க்குவித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான் உட்பட ஆப்ரிக்காவில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளின் அமைதிக்காகவும் ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பாவின் ஆயர்கள் இணைந்து ஜெபித்தனர்.

ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆயர்களிடையேயான இந்த மூன்றாவது கருத்தரங்கினைத் தொடர்ந்து அடுத்தக் கூட்டம் 2012ம் ஆண்டு உரோம் நகரில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.