2010-11-16 15:35:14

இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் உறவுகளுக்கான அமைப்பும் திருப்பீட அவையும் சந்தித்தன.


நவ 16, 2010. ஈரானின் இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் உறவுகளுக்கான அமைப்பு, மற்றும் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை ஆகியவைகளுக்கிடையேயான மூன்று நாள் கூட்டம் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

“மதமும் சமூகமும் இன்று, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியக் கண்ணோட்டங்கள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆறு கருத்துக்களில் ஒத்திசைவு ஏற்பட்டுள்ளது.

சமூகத்திற்கானத் தங்கள் சிறப்புப் பங்கை ஆற்ற உள்ள மத நம்பிக்கையாளர்கள் ஏனைய குடிமக்களையொத்த அனைத்து உரிமைகளையும் உடையவர்கள் என்பது முதல் கருத்தாக ஏற்கப்பட்டது.

அரசுகள் மதங்களை மதிக்க வேண்டும், பொதுநலனுக்காக உழைப்பதில் மத நம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பு, நவீன கால சவால்களை எதிர்கொள்வதிலும் ஒழுக்க மதிப்பீடுகளை முன்னேற்றுவதிலும், நீதி, அமைதி, குடும்பம், சுற்றுச்சூழல் ஆகியவைகளுக்காக உழைப்பதிலும் விசுவாசிகளிடையே ஒத்துழைப்பு, மதவிடுதலை, இளைஞர்களுக்கான கல்வி போன்றவைகள் குறித்த இசைவும் ஈரானின் இஸ்லாமியக் கலாச்சார நிறுவனத்திற்கும் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கானத் திருப்பீட அவைக்கும் இடையே இடம்பெற்ற இந்த ஏழாவது தொடர் பேச்சுவார்த்தையின் போது வழங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.