2010-11-15 15:32:03

ஆஸ்திரேலியாவில் துறவறத்தார் மற்றும் குருக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


நவ 15, 2010. ஆஸ்திரேலியாவில் துறவறத்தார் மற்றும் குருக்களின் எண்ணிக்கை 1976ம் ஆண்டின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது தற்போது பாதியாகக் குறைந்துள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

1976ம் ஆண்டு 17 ஆயிரத்து 29 ஆக இருந்த இவர்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக அதாவது 8,422 ஆக குறைந்துள்ளதாக இவ்வாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

இன்று ஆஸ்திரேலியாவில் துறவறத்தாரின் சராசரி வயது 73 எனவும், மொத்த துறவறத்தாரில் 8.2 விழுக்காட்டினர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், மாறாக 26.6 விழுக்காட்டினர் 80 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கிறது இவ்வாய்வு.








All the contents on this site are copyrighted ©.