2010-11-13 14:06:39

வடகொரியா ஈரான், சிரியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு அணுப்பொருட்கள் வியாபாரம் – ஐ.நா.அறிக்கை


நவ.13, 2010: ஈரான், சிரியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு வடகொரியா அணு மற்றும் வெடிமருந்து பொருட்களை இரகசிய வழிகளில் வழங்கி வருவதாக இவ்வெள்ளியன்று வெளியான ஐ.நா.அறிக்கை கூறுகிறது.

சர்வதேசத் தடைகளைத் தவிர்ப்பதற்காக இப்பொருட்கள் இரகசியமாக வழங்கப்படுவதாகக் குறை கூறும் அவ்வறிக்கை, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடைசி தடவையாகத் தடைகள் விதிக்கப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை குறித்த நான்கு விவகாரங்கள் வெளியில் தெரிந்துள்ளன என்றும் கூறுகிறது.

எனினும் இவ்வறிக்கை வெளியிடப்படுவதைச் சீனா தடை செய்துள்ளது. இதற்கிடையே, சூடானின் டார்பூர்ப் பகுதியில் சண்டை இடம் பெற்ற இடங்களில் சீனக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.