2010-11-12 15:05:13

இந்தியாவில் இலட்சக்கணக்கான உணவுதானிய மூட்டைகள் வீணாக்கப்பட்டு வருகின்றன - பேராயர் கொர்னேலியோ


நவ.12,2010. இந்தியாவில் அண்மைப் பருவமழைக் காலத்தில் உணவு தானியச் சேமிப்புக் கிடங்குகள் சரியாகப் பாதுகாக்கப்படாததால் அங்கிருந்த சுமார் 90 விழுக்காட்டுத் தானியங்கள் வீணாய்ப்போனது குறித்து அரசு அதிகாரிகளைக் குறை கூறியுள்ளார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.

இந்தியாவில் மக்கள் பசியினால் இறந்து கொண்டிருக்கும் போது இலட்சக்கணக்கான உணவுதானிய மூட்டைகள் வீணாக்கப்பட்டு வருகின்றன என்றார் பேராயர் கொர்னேலியோ.

FCI என்ற இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளைச் சேமிப்புக் கிடங்குகளுக்குள் வைக்காது, வெளியில் போட்டு வைத்திருந்ததால் அவை மழையில் சேதமாகின என்றுரைத்தப் பேராயர், உணவும் உணவுத் தானியங்களும் வீணாக்கப்படுவது சகித்துக் கொள்ளப்பட முடியாதது என்று கூறினார்.

சர்வதேச உணவு ஆராய்ச்சி நிறுவனத்தின் கணக்குப்படி, இவ்வாண்டு பசியால் வாடும் 88 நாடுகளில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.