2010-11-11 15:32:35

நவம்பர் 12 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1817 - பஹாய் சமயத்தைத் தோற்றுவித்த பஹாவுல்லா பிறந்தார்

1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.

1847 – சர் ஜேம்ஸ் யங் சிம்ப்சன் என்ற பிரித்தானிய மருத்துவர், அறுவைச் சிகிச்சைக்கு முன்னர் கொடுக்கப்படும் மயக்கமருந்துக்கு குளோரோஃபாமை முதன்முதலில் பயன்படுத்தினார்.

1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் அதாவது தற்போதைய பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு அமைக்கப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

1905 - நார்வே மக்கள், குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது என வாக்கெடுப்பு மூலம் தெரிவித்தனர்.

1918 - ஆஸ்ட்ரியா குடியரசாகியது.

1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.

1994 - இலங்கையின் ஐந்தாவது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.