2010-11-10 15:07:13

துருக்கி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு மடம் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்புக்கு மீண்டும் ஒப்படைப்பு


நவ.10, 2010. துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்புக்குச் சொந்தமான ஒரு மடத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த துருக்கி அரசு, மீண்டும் அதை அவ்வமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1999ம் ஆண்டு ஆரம்பமான இந்த வழக்கில் அரசுக்கு எதிராக இந்த அமைப்பினர் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வி கண்டன. எனவே, இவ்வமைப்பினர் Strasbourgல் உள்ள மனித உரிமைகள் நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்திருந்தனர். அந்நீதி மன்றம் அண்மையில் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்புக்குச் சாதகமாகத் தன் தீர்ப்பை அளித்ததை அடுத்து, துருக்கி நீதி மன்றமும் தன் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மீண்டும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மடம் மதங்களுக்கிடையேயான உரையாடலை வளர்க்கும் ஒரு உலக மையமாக மாற்றப்படும் என்று கிறிஸ்தவ ஒருமைப்பட்டு குல முதல்வர் முதலாம் Bartholomew கூறினார்.துருக்கி அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இன்னும் பிற 23 மடங்கள் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மீட்கப்பட வாய்ப்புள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.