2010-11-09 15:48:28

ஹெய்ட்டி நாட்டில் தன் பணி முயற்சிகளை இரு மடங்காக்கியுள்ளது காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு.


நவ 09, 2010. ஹெய்ட்டி நாட்டில் குறைந்த பட்சம் 20 பேரின் உயிழப்புகளுக்குக் காரணமான அண்மைப் புயல் தாக்குதலைத் தொடர்ந்து , தன் பணி முயற்சிகளை இரு மடங்காக்கியுள்ளதாக அறிவித்துள்ளது காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு.

ஜனவரி மாதம் 12ந்தேதியின் நில அதிர்ச்சி மற்றும் அதனைத்தொடர்ந்த காலரா நோய் போன்றவைகளின் மத்தியில் சிறப்புச் சேவையாற்றி வந்த சர்வதேச காரித்தாஸ் அமைப்பு, தற்போது புதிதாக இடம்பெற்றுள்ள இயற்கைப் பேரிடரைத் தொடர்ந்து அந்நாட்டிற்கான பிறர் நலப் பணிகளை இருமடங்காக்கியுள்ளது.

காலரா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பெருமுயற்சியில் தற்போது இப்புயல் தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக உரைத்த காரித்தாஸ் பணியாளர்கள், புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுள் 20,000 பேருக்கு உணவு, சுகாதாரப்பொருட்கள், குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் போன்றவைகளை வழங்கும் திட்டத்துடன் செயலாற்றி வருவதாகவும் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.